#15 Skin Care In Diabetes / நீரிழிவு நோயாளியின் தோல் பராமரிக்கும் வழிமுறைகள் | Dr. Shabari Arumugam

Welcome back to PART TWO of the article on "SKIN AND DIABETES"

THIS IS A BILINGUAL  POST. TO READ IN TAMIL, SCROLL DOWN! 

இதை தமிழில் படிக்க, கீழே செல்லவும்

Skincare is an important factor for people with diabetes. Skin conditions can be more likely amongst Diabetics, and reduced sensitivity of nerves and circulation can often make it harder to spot emerging skin problems. 

The skin on our feet need particular attention as the presence of diabetic neuropathy can sometimes lead to skin issues not being identified until an advanced stage, when they cause serious problems.

WHY ARE DIABETICS MORE PRONE TO SKIN PROBLEMS?
People with diabetes may experience greater loss of fluid from the body due to high blood glucose levels, which can cause dry skin on the legs, elbows, feet and other areas of the body. 

If dry skin becomes cracked, germs can get into these areas and cause infection, meaning that taking care of the skin is essential.

12 POINT SKINCARE FOR DIABETICS!

  1. Keep your diabetes well managed. 
  2. Wash with mild, neutral soaps and make sure that, you dry your skin immediately. This may include drying between your toes, under your arms, and anywhere also that water can hide.
  3. Prevent dry skin. Scratching dry or itchy skin can open it up and allow the infection to set in. 
  4. Use a moisturising lotion to keep your skin soft and moist & to prevent cracking especially in cold or windy weather. This type of cream is widely available and can make a huge difference.
  5. Do not put oils or creams between your toes. The extra moisture can lead to infection. Also, don't soak your feet—that can dry your skin.
  6. Drink an adequate quantity of water. Keeping hydrated can help with keeping your skin moist and healthy.
  7. Use mild shampoos. 
  8. Wear loose-fitting underwear made from 100% cotton – this allows a healthy thorough flow of air.
  9. Consider wearing special socks and shoes if you have neuropathy and are worried about the skincare of your feet.
  10. Take good care of your feet. Check them every day for wounds and cuts. Wear broad, flat shoes that fit well. Check your shoes for foreign objects like stones before putting them on.
  11. Keep a close eye on any dry or red spots on your skin,  areas affected by neuropathy and make sure to seek professional advice at an early stage. 
  12. Seek Dermatologist advice if you have persistent dry skin as this can lead to infections, which can quickly develop into serious complications.
If you have further queries, please leave it in the comments.
If you wish to get the newsletter from this BLOG, do SUBSCRIBE!
P.S: Follow us on INSTAGRAM and FACEBOOK!
SOURCES:
  • American Diabetes Association
  • diabetes.co.uk

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!
"தோல் மற்றும் நீரிழிவு" பற்றிய கட்டுரையின் இரண்டு பகுதிக்கு மீண்டும் வருக.


நீரிழிவு நோயாளிகளுக்கு தோல் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். நீரிழிவு நோயாளிகளிடையே தோல் நோய்கள் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் நரம்புகளின் குறைவான உணர்திறன் மற்றும் சீரற்ற இரத்த ஓட்டம் தோல் பிரச்சினைகளை கண்டறிவதை கடினமாக்கும்.

தோல் பராமரிப்பில் மிக முக்கியமான ஒன்று, பாதத்தின் தோல் பராமரிப்பு ஆகும். 
நீரிழிவு நோயால் நரம்புகள் (Nerves) பாதிக்கப்பட்டிருந்தால், தோல் நோய்கள் (நீரிழிவு புண்- Diabetes ulcer)
 முற்றிய நிலை அடையும் வரை, அவர்கு எந்த அறிகுறியும் தெரியாது. எனவே பாதத்தின் தோல் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

நீரிழிவு நோயாளிகளில் ஏன் தோல் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றன?

நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு காரணமாக, உடல் அதிக நீர் சத்து இழப்பை சந்திக்க நேரிடும். இதனால் கால்கள், முழங்கைகள், பாதம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் நீரிழிவு நோய் வறண்ட சருமத்தை ஏற்படுத்தும்.

வறண்ட சருமம்  காரணமாக தோலில் வெடிப்பு ஏற்படும். இதனால்  கிருமிகள் இந்த பகுதிகளுக்குள் எளிதாக சென்று தொற்றுநோயை ஏற்படுத்தும், எனவே சருமத்தை கவனித்துக்கொள்வது அவசியம்.

நீரிழிவு நோயாளியின் தோல் பராமரிக்கும் 12 வழிமுறைகள்!

  1. உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  2. லேசான சோப்புகளால் (mild neutral pH soaps) குளிக்க வேண்டும். குளித்தவுடன் உங்கள் சருமத்தை உடனடியாக உலர வைக்கவும். உங்கள் கால்விரல்களுக்கு இடையில், உங்கள் அக்குள், மற்ற நீர் மறைத்திருக்கும் பகுதிகளை மறக்காமல் உலர வைக்கவும்.
  3. உங்கள் சருமத்தை வறண்டு போக விடாமல் பார்த்து கொள்ளவும். வறண்ட தோலை சொறிவது மூலம்  புண் ஏற்படுகின்றது. இது தொற்று நோய்க்கு வழி வகுக்கும். 
  4. உங்கள் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க, விரிசலைத் தடுக்க, குறிப்பாக குளிர் அல்லது காற்று வீசும் காலநிலையில், ஈரப்பதமூட்டும் லோஷனைப் (Moisturizers) பயன்படுத்தவும். இந்த வகை கிரீம் பரவலாகக் கிடைக்கிறது, மேலும் இது உங்கள் தோலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். 
  5. உங்கள் கால்விரல்களுக்கு இடையில் எண்ணெய் அல்லது கிரீம்களை தடவ வேண்டாம். ஏனென்றால் இந்த இடத்தில் கூடுதல் ஈரப்பதம் இருந்தால் அது தொற்றுக்கு வழிவகுக்கும். மேலும், உங்கள் கால்களை தண்ணிரில் ஊறவைக்காதீர்கள் - அது உங்கள் சருமத்தை வறண்டு போக செய்யும்.
  6. போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் சருமத்தை வறண்டு போக விடாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
  7. தலை முடி வறண்டு போக விடாத ஷாம்பூக்களைப் (mild shampoos) பயன்படுத்துங்கள்.
  8. 100% பருத்தியிலிருந்து தயாரிக்கப்படும் தளர்வான-பொருத்தமான உள்ளாடைகளை அணியுங்கள் .
  9. உங்களுக்கு நீரிழிவு நோயால் நரம்பு பாதிப்படைந்திருந்தால, சிறப்பு சாக்ஸ்(socks) மற்றும் காலணிகளை அணிவது முக்கியம்.
  10. உங்கள்  பாதங்களை தினசரி பரிசோதிக்க வேண்டும். காயங்கள் மற்றும் வெட்டுக்களுக்காக ஒவ்வொரு நாளும் அவற்றைச் சரிபார்க்கவும். நன்றாக பொருந்தக்கூடிய அகலமான, தட்டையான காலணிகளை அணியுங்கள். உங்கள் காலணிகளை அணிவதற்கு முன்பு, அதனுள் கல் ஏதேனும்  இருக்கிறதா என்று சரிபார்த்து அணிய வேண்டும். 
  11. உங்கள் சருமம் நீண்ட காலமாக வறண்டு போய் இருந்தால் அல்லது சிவப்பு புள்ளிகள் ஏதேனும் இருந்தால், தோல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். ஏனெனில் இது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
  12. நீரிழிவு நோயால் நரம்பு பாதிப்படைந்திருந்தால், ஆரம்ப கட்டத்திலேயே நரம்பியல் ஆலோசனையைப் பெறுங்கள்.
உங்களிடம் மேலும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து கருத்துகளில் இடவும்.

இந்த வலைப்பதிவிலிருந்து செய்திமடலைப் பெற விரும்பினால், SUBSCRIBE செய்யுங்கள்!

பி.எஸ்: இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் எங்களைப் பின்தொடருங்கள்!

ஆதாரங்கள்:
  • அமெரிக்க நீரிழிவு சங்கம்
  • diabetes.co.uk

Comments

Popular posts from this blog

#41 Best 5 cleansers for Dry Skin

# 40 Summer Skin Care | LaShine Skin & Hair Clinic

#32 Psoriasis Series: Part 2 -Types of psoriasis | Dr. Shabari Arumugam